இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்தியாவின் வளர்ச்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
“வெற்றிகரமான இந்தியா என்பது உலகை மிகவும் நிலையானதாகவும், வளமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும். இதன் மூலம் உலக நாடுகள் அனைத்தும் பலன்பெறும்” என்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 19 ஆண்டுகளாக (2007 முதல்) இழுபறியில் இருந்த இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் இறுதி செய்யப்பட உள்ளது.
இந்தியா முன்னேறினால் உலகமே அமைதியடையும்: ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்
