சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், டிசம்பர் 10ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவுக்கு வந்துள்ள “1+10” உடையாடலில் கலந்துகொள்கின்ற முக்கிய சர்வதேச பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் சந்தித்துரையாடினார்.
அவர் கூறுகையில்,
முக்கிய சர்வதேச பொருளாதார அமைப்புகளுடன் சேர்ந்து, பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, சர்வதேச ஒத்துழைப்புகளை முன்னேற்றி, தெற்குலக நாடுகளின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து, சமமான உலக பலதரப்புவாதமயமாக்கத்தையும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தையும் முன்னேற்றி, கூட்டாக வளரும் நியானமான உலகத்தைக் கட்டியமைக்க சீனா விரும்புகிறது என்றார் அவர்.
புதிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் தலைவர்கள் இதில் உரைநிகழ்த்தினர். சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிச் சாதனைகளை அவர்கள் வெகுவாக பாராட்டினர். சீனாவின் வளர்ச்சிக்கு அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர். சர்வதேச பொருளாதார அமைப்புகளின் பணிகளுக்கு சீனா நீண்டகமாலமாக ஆதரவளிப்பதற்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.