சீனத் தேசிய அஞ்சல் பணியகத்தின் தரவின்படி, 2025ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் வரை, சீனாவில் அனுப்பப்பட்ட விரைவஞ்சலின் மொத்த எண்ணிக்கை முதன்முறையாக 18ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.
இவ்வாண்டு முதல், அஞ்சல் தொழிலின் அளவிலான பொருளாதாரத்தின் பங்களிப்பு தொடர்ச்சியாக விரிவாகி தொழில் மற்றும் பிராந்திய பொருளாதாரத்துக்கான அதன் உந்து ஆற்றலும் குறிப்பிடத்தக்கவாறு உயர்ந்துள்ளது என்று இப்பணியகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் அறிமுகப்படுத்தினார்.
கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் அஞ்சல் தொழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டை அதிகரித்துள்ளது. இயந்திரங்கள் மற்றும் இயந்திர மனிதர்களின் பயன்பாட்டுடன், கிடங்கில் சேமித்தல், வரிசைப்படுத்துதல், போக்குவரத்து, அஞ்சல் அனுப்புதல் முதலிய நிலைகளின் செயல்திறன் பெரிதும் உயர்ந்துள்ளது.
