மக்கெள தாய்நாட்டிற்குத் திரும்பிய 25வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் நாள் சீன ஊடகக் குழுமம் தயாரித்த சிறந்த நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு நடவடிக்கை மக்கெளவில் துவங்கியது.
மக்கெளவில் உள்ள பல முக்கிய செய்தி ஊடக தளங்களில் பதினொரு தலைசிறந்த நிகழ்ச்சிகள் படிப்படியாக ஒளிபரப்பப்படும். சீன ஊடகக் குழுமத்துக்கும் மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஆழமான நெடுநோக்கு ஒத்துழைப்பின் மற்றொரு சாதனை இது ஆகும்.
புதிய காலத்தில் தாய்நாட்டில் ஏற்படும் பெரும் மாற்றங்களையும், அற்புதமான மற்றும் நீண்டகாலமான சீனப் பண்பாட்டையும் மக்கெள மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள இது மேலும் உதவும்.
நாட்டுப்பற்றுடன் மக்கெள மக்கள் பற்று எழுச்சியை வெளிக்கொணர்ந்து, தாய்நாட்டுடன் கூட்டாகச் செழித்து முன்னேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.