சீன வெளியுறவு ஆசிய பிரிவின் தலைவர் லியு ச்சின்சுங், பெய்ஜிங்கில், ஜப்பான் வெளியுறவு ஆசிய மற்றும் ஓசியானிய பிரிவின் தலைவருடன் 18ஆம் நாள் முற்பகல் கலந்தாய்வு நடத்தியதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த கலந்தாய்வில், ஜப்பான் தலைமை அமைச்சர் தகைச்சி சனேவின் தவறான கூற்று குறித்து சீனா ஜப்பானுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது. தகைச்சியின் தவறான கூற்று, சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவு கோட்பாட்டையும் மீறியது. 2ஆம் உலக போருக்கு பின்னர் சர்வதேச ஒழுங்கை இது சீர்குலைத்துள்ளது. ஒரே சீனா என்ற கொள்கையையும் சீன-ஜப்பான் 4 அரசியல் ஆவணங்களின் எழுச்சியையும் இது மீறியது என்று இந்த கலந்தாய்வில் சீனா தெரிவித்தது.
ஜப்பான் தனது தவறான கூற்றைத் திரும்ப பெற்று, சீனாவுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் தலையீடு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது.
