இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் காலமானார். இவருடைய மறைவை முன்னிட்டு நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது நாளை ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒருநாள் சனிக்கிழமை விடுமுறை. மேலும் இந்த விடுமுறை அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.