தற்போது, புதிய தர உற்பத்தி ஆற்றல் என்பது சீனப் பொருளாதாரத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்டியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3 ஆவது முழு அமர்வுக் கூட்டத்தில், புதிய தர உற்பத்தி ஆற்றலை வளர்ப்பதற்கான அமைப்புமுறையை முழுமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
உலக வளர்ச்சியின் முக்கியப் போக்கு, சீனாவின் வளர்ச்சி ஆகிய இரண்டு கோணங்களில் இருந்து, புதிய தர உற்பத்தி ஆற்றலை சீனா வளர்ப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ளலாம்.
வெளிப்புறக் காரணிகளின் பார்வையில், தொழில் புரட்சி, தகவல் புரட்சி ஆகியவற்றுக்கு உற்பத்தி ஆற்றலின் மாற்றம் முக்கியக் காரணமாகும். இன்றைய காலத்தில் அறிவியல் தொழில்நுட்பங்கள் விரைவாக மாறி வரும் சூழலில், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உற்பத்தி ஆற்றலின் மேம்பாட்டைச் சார்ந்திருப்பது உறுதி. உட்புற காரணிகளின் பார்வையில், சீனப் பொருளாதாரத்தில் ஆழமான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பொருளாதார மதிப்புக்கு பதிலாக, வளர்ச்சியின் தரத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புத்தாக்கம் மூலம் புதிய தொழில் மற்றும் புதிய உந்து சக்தி ஆகியவற்றை கண்டறிய வேண்டும். இந்த முன்னேற்றப் போக்கில், பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்த வரை, புதிய தரமான உற்பத்தி ஆற்றல் என்பது, பெரிய சந்தை வாய்ப்பு ஆகும்.
இவ்வாண்டில் சீன உயர் தொழில்நுட்ட உற்பத்தித் துறையில் முதலீடுகளின் பங்கு தொடர்ச்சியாக உயர்ந்து வருவதில் இருந்து அது நிரூபிக்கப்படுகிறது.