நேபாளம்- திபெத் எல்லையில் நேற்று சக்திவாய்ந்த 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட ஆறு நிலநடுக்கங்கள் தாக்கின.
திபெத்தின் டிங்ரி கவுண்டியை மையமாகக் கொண்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அதிர்வுகள் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் வரை உணரப்பட்டது.
இதில் பல உயிர்கள் பலியானதுடன் கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளது. ஆரம்பத்தில், குறைவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
ஆனால் மீட்புக் குழுக்கள் இடிபாடுகள் இடையே சிக்கியவர்களை மீட்க எத்தனிக்கையில் இறப்பு எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தது, 188 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.