உலகின் மிகப் பெரிய பசுமை எரியாற்றல் இடைவழி பகுதியின் யாங்சி ஆற்றின் முக்கியப் பகுதியிலுள்ள 6 நீர் மின் நிலையங்கள் 2024ஆம் ஆண்டில் மொத்தமாக 29ஆயிரத்து 590.4கோடி கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன.
இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 7.11விழுக்காடு அதிகமாகும். இது, கிட்டத்தட்ட 8கோடியே 92லட்சத்து 40ஆயிரம் டன் நிலக்கரி சிக்கனப்படுத்தப்பட்டதற்கும் 24கோடி டன் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கும்ச் சமமாகும்.
உலகின் இந்த மிகப் பெரிய பசுமை எரியாற்றல் இடைவழிப் பகுதி 1800கிலோ மீட்டர் நீளமானது. மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றல் 7கோடியே 16லட்சத்து 95ஆயிரம் கிலோவாட்டை எட்டியுள்ளது.
அதோடு, அதன் நீர்த்தேக்கத்தின் பயண வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தரவின்படி, 2024ஆம் ஆண்டு, யாங்சி ஆற்று மூமலை பள்ளத்தாக்கு மூலம் அனுப்பப்பட்ட பொருட்களின் எடை 15கோடியே 90லட்சம் டன்னாகும்.