நவீன தொழில்முறை கல்வி அமைப்பை நிறுவும் சீனா

அறிவியல் தொழில்நுட்பம், தேசிய நெடுநோக்கு தேவை ஆகியவற்றுக்கு ஏற்றப்படி பாடத்துறைகளின் உருவாக்கம் மற்றும் மாற்றம் என அமைப்புமுறையை விரைவுபடுத்தி, அறிவியல் தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளையும் தொழிற்துறைகளின் புத்தாக்கங்களையும் ஒருங்கிணைக்கும் அமைப்புமுறையை உருவாக்குவதில் ஆய்வு மேற்கொள்ள சீனக் கல்வித் துறை அமைச்சகம் 2025ஆம் ஆண்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும், நவீன தொழில்முறைக் கல்வி அமைப்புமுறையை நிறுவுவது மற்றொரு முக்கிய இலக்காகவும் செயல்படும். இந்த முயற்சிகளின் மூலம் புதிய தரமான உற்பத்தி ஆற்றல்களை வளர்ப்பதற்கு உதவி அளிக்கும் என்று எதிர்பார்ப்படுகிறது. 9ஆம் நாள் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு தேசிய கல்விப் பணிக் கூட்டத்தில் இந்த செய்தி வெளியானது.

இந்த இலக்குகளுக்காக,  கல்வித்துறைச் சார்ந்த பொது சேவையின் தரத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவது, தேசிய கல்வி எண்முறை மயமாக்கத் திட்டத்தை முன்னெடுப்பது உள்ளிட்ட இவ்வாண்டுக்கான 7 முக்கிய பணிகளை சீனக் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author