சீனத் திரைப்பட நாள் நிகழ்வு நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 9 ஆம் நாள் நடைபெற்றது.
இது பற்றி, நேபாளத்துக்கான சீன தூதரகத்தின் அலுவலர் வாங் சின் கூறுகையில் நடப்பாண்டு சீனாவுக்கும் நேபாளத்துக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவு ஆண்டாகவும், இவ்வாண்டு நேபாளச் சுற்றுலா ஆண்டாகவும் ஆகும்.
இந்நிலையில், இரு நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கிடையே பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு நடத்தப்படுகின்றது என்றார்.
இதனிடையில் மொழி தடைகளை உடைத்து அனைவரையும் இணைக்கும் திறனைத் திரைப்படங்கள் கொண்டுள்ளதாக நேபாளக் கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமான நந்தபஹதூர் புன் தெரிவித்துள்ளார்.