சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 18முதல் 45வயது வரையான 4003 இளைஞர்களிடம் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
இவர்களுள் 87.3 விழுக்காட்டு சீன இளைஞர்களும் 78.5 விழுக்காட்டு அமெரிக்க இளைஞர்களும் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதே இரு நாடுகளின் பொருளாதார வர்த்தக பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படை வழிமுறையாகும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவும் அமெரிக்காவும் இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவில் நிலவும் கட்டமைப்பு ரீதியிலான பிரச்சினைகளைத் தெளிந்த சிந்தனையுடன் அணுக வேண்டும். பேச்சுவார்த்தையில் ஊன்றி நிற்க வேண்டும் என்று கணிப்பில் கலந்து கொண்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், இரு நாட்டுறவு சீராகவும் நிலையாகவும் வளர்வதை எதிர்பார்ப்பதாகவும் 98.2விழுக்காட்டு சீன இளைஞர்களும் 92.6விழுக்காட்டு அமெரிக்க இளைஞர்களும் கருத்துக் கூறியுள்ளனர்.