சீன-வியட்நாம் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் டோ லாம், வியட்நாம் அரசுத் தலைவர் லுவாங் குவாங் ஆகியோருடன் ஜனவரி 18-ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
அப்போது, ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-வியட்நாம் உறவின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். உங்களுடன் இணைந்து, இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை ஆழமாக்கி, பயனுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கையோடு கை கோர்த்து முன்னேறி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் நம்மை புரிய விரும்புவதாக கூறினார்.
அதே நாள், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், வியட்நாம் தலைமையமைச்சர் ஃபாம் மின் சின் ஆகியோரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.