கிரிநாடா தலைமையமைச்சர் டிக்கான் மிட்செல், 2025ஆம் ஆண்டு சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசாங்க தலைவராவார்.
சீன ஊடகக் குழுமத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சிறப்பு நேர்காணலை அளித்த மிட்சில் கூறுகையில், சீனாவுடன் அரசியல் தூதாண்மை உறவில் அடிப்படை வசதிக் கட்டுமானம், மருத்துவச் சிகிச்சை மற்றும் சுகதாரம், வேளாண் துறை வளர்ச்சி, பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிரிநாடா பயனடைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, சீனா முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு ஆகியவை, உலகத்துக்கு ஆதரவளித்துள்ளன.
சர்வதேச சமூகத்தின் வேறு நாடுகள், குறிப்பாக தெற்குலக நாடுகள் இந்த முன்மொழிவுகளை ஆதரிக்க வேண்டும். மேலும், பல்வேறு நாடுகளுக்கிடையேயான மோதல்களைத் தீர்ப்பதற்கும், முக்கிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு சீனா உதவியளித்து வருகிறது என்றார்.
தவிரவும், சீனாவின் வளர்ச்சி, உலகத்துக்கு மதிப்புள்ள அனுபவங்களை வழங்கியது என்றும், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், பண்பாடு, காலநிலை மாற்றத்துக்கான சமாளிப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.