டொனால்ட் டிரம்புடன் ஷிச்சின்பிங் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்புடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 17-ஆம் நாள் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.

அமெரிக்க அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார். சீன-அமெரிக்க உறவு புதிய தொடக்க புள்ளியிலிருந்து மேலும் பெரிய முன்னேற்றம் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், வெவ்வேறு நாட்டு நிலைமைகளைக் கொண்ட இரு பெரிய நாடுகளாக, சீனாவும் அமெரிக்காவும் சில கருத்து வேற்றுமைகளைக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாது.

இதை எதிர்கொள்ள, தத்தமது மைய நலன்கள் மற்றும் அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல், உரிய முறையில் தீர்க்கும் வழிமுறைகளைக் கண்டறிதல் ஆகியவை முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்ததோடு, ஷிச்சின்பிங்குடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். மேலும்,  தொடர்புகளை  நிலைநிறுத்தவும், வெகுவிரைவில் ஷிச்சின்பிங்கை சந்திக்க விரும்புவதாகவும்  டிரம்ப்  தெரிவித்தார்.

தவிரவும், உக்ரைன் நெருக்கடி, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட பொது அக்கறைக் கொண்ட முக்கிய சர்வதேச, பிரதேச பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இரு நாடுகளும் பொதுவாக கவனம் செலுத்துகின்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து வழக்கமான தொடர்பை நிலைநாட்டும் வகையில், நெடுநோக்கு தன்மை வாய்ந்த தொடர்பு வழியை அமைக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author