வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சியை முழு உலகமும் கண்டு ரசிப்பது எனும் நிகழ்ச்சி ஜனவரி 16ஆம் நாள் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் காணொலி மூலம் உரைநிகழ்த்திய சீன ஊடக குழுமத்தின் பொது இயக்குநர் ஷேன் ஹாய்சியுங் கூறுகையில்,
வசந்த விழா, சீனத் தேசத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும். உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் வசந்த விழாவை வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடுகிறார்கள் என்று தெரிவித்தார்.
வசந்த விழா யுனெஸ்கோவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சி, 2025ஆம் ஆண்டு வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சி ஆகும்.
சீன ஊடகக் குழுமத்தால் தயாரிக்கப்படும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சீனப் பாரம்பரிய பண்பாடுகளுடன் கூடிய பாடல்கள் ஆடல்கள் உள்ளிட்ட பல்வகை நிகழ்ச்சிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.