மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் பலியான விமான விபத்திற்கு, அப்பகுதியில் நிலவிய மிக மோசமான வானிலை மற்றும் அடர் பனிமூட்டமே முக்கிய காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை காலை பார்மதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது, பார்வைத் திறன் திடீரென குறைந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விமான விபத்தின் தாக்கம் மற்றும் விபத்திற்கு பின் ஏற்பட்ட பயங்கர தீயினால், மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்து போயிருந்தன.
பார்மதி விமான விபத்து:அடர் பனிமூட்டமே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்
