அமெரிக்க ஐயொவா மாநில நண்பர்களுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

அமெரிக்க ஐயொவா மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 27-ஆம் நாள், வசந்த விழா வாழ்த்து தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில் கூறுகையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஐயொவா மாநிலத்தில் பயணம் மேற்கொண்டேன். உங்கள் விருந்தோம்பல், என் மனத்தில் பதிந்துள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே பரந்த பொது நலன்களும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் நிலவுகின்றன. இரு நாட்டு மக்கள் கருத்து பரிமாற்றத்தை அதிகரித்து, நட்பு கதையைக் கூட்டாக உருவாக்கி, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிக்குப் புதிய பங்கு ஆற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author