சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, அரசவை ஜனவரி 27-ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான வசந்த விழா வாழ்த்து கூட்டத்தை நடத்தின. இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தி, கட்சி மத்திய கமிட்டி மற்றும் அரசவை சார்பில், நாட்டின் பல்வேறு இன மக்கள், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச உடன் பிறப்புகள், மக்காவ் சிறப்பு நிர்வாகப் பிரதேச உடன் பிறப்புகள், தைவான் உடன் பிறப்புகள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்கின்ற சீன வம்சாவழியினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கடந்த ஓராண்டில், உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, நடைமுறையிலுள்ள கொள்கைகளை பயனுள்ள முறையில் செயல்படுத்தி, ஒரு தொகுதி கூடுதல் கொள்கைகளை வெளியிட்டதுடன், சீனாவின் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது. 2025-ஆம் ஆண்டு, 14-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கடைசி ஆண்டாகும். புதிய வளர்ச்சி கருத்தை முழுமையாகவும் சரியாகவும் செயலாக்கி, புதிய வளர்ச்சி நிலைமையை உருவாக்குவதை விரைவுபடுத்தி, சீர்திருத்ததை மேலும் ஆழமாக்கி, உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்க வேண்டும். இவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சியை சீராக முன்னெடுத்து, சமூகத்தின் நிதானத்தை நிலைநிறுத்த வேண்டும். அதே வேளையில் கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
சீன அரசவையின் கூட்டத்தில் ஷிச்சின்பிங் வாழ்த்துரை

Estimated read time
1 min read