அமெரிக்காவின் வாஷிங்டனில் பயணியர் விமானம் ஒன்று ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளாது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சீனா ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறது. விமான விபத்து நிகழ்ந்த பிறகு, வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் ஆகியவை, உடனுக்குடன் அவசர அமைப்பு முறையைத் தொடங்கியுள்ளன. முதற்கட்ட புலனாய்வின்படி, இரு சீன குடிமக்கள் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா, மீட்புப் பணியின் முன்னேற்றத்தைக் காலதாமதமின்றி அறிவித்து, விபத்துக்கான காரணத்தை கூடிய விரைவில் துப்புத்துலக்கி, மீட்புப்பணி தொடர்பான ஏற்பாட்டுப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமென்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது. தவிரவும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, இவ்விவகாரம் குறித்துத் தேவையான அவசிய உதவியை சீனா வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.