அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது அடுத்தகட்ட அனல் பறக்கும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார். மார்ச் 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கும் அவர், அங்குள்ள வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அதனைத் தொடர்ந்து, மார்ச் 8-ஆம் தேதி பெருந்துறை மற்றும் பவானி ஆகிய தொகுதிகளில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படுவதால், ஈரோட்டில் இபிஎஸ் மேற்கொள்ளும் இந்த மூன்று நாள் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இப்போதே இபிஎஸ்-க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகின்றனர். திமுக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டியும், அதிமுகவின் சாதனைகளை விளக்கியும் அவர் இந்தப் பிரச்சாரத்தில் பேசவுள்ளார்
