சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிப்ரவரி 6ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2024ஆம் ஆண்டில் சீனாவின் மின்னணு தகவல் தயாரிப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சி வேகமாக இருக்கின்றது. ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய மின்னணு தகவல் தயாரிப்பு நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 11.8 விழுக்காடு அதிகமாகும். இத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி போக்கு நன்றாக உள்ளது.
2024ஆம் ஆண்டில் கைப்பேசிகளின் உற்பத்தி 167 கோடியாகும். இது, கடந்த ஆண்டை விட 7.8 விழுக்காடு அதிகமாகும். ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய மின்னணு தகவல் தயாரிப்பு நிறுவனங்களின் வருமானம் 16 இலட்சத்து 19 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 7.3 விழுக்காடு அதிகமாகும். அவற்றின் மொத்த லாபத் தொகை 64080 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 3.4 விழுக்காடு அதிகமாகும்.