உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்துமே வாகன நிறுத்துமிடங்களாக மாறிய நிலையில் 300 கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் வாகனங்களின் கடல் உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.
உலகின் மிகப்பெரிய மதக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் தங்கள் கார்களில் வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிராபிக் ஜாமில் சிக்கித்தவித்தனர்.
“உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்” என்று இணையவாசிகள் அழைத்த இந்த முன்னெப்போதும் இல்லாத நெரிசல், 200-300 கி.மீ வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை பிராஜ்ராஜ் நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த போக்குவரத்தை போலீசார் நிறுத்தினர்.
இதனால் மக்கள் பல மணி நேரம் சாலைகளில் சிக்கித் தவித்தனர்.
மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்
![](https://puthiyathisaigal.com/wp-content/uploads/2025/02/l71520250210092035-P2oEYZ.jpeg)