தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், திருவிழாவின் 5ம் நாளான இன்று, மலை அடிவாரத்தில் பக்தர்கள் குவிந்துள்ளனர். குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், 4 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.