தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறையில் இருந்து ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்வாரிய தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக பவன் குமார் கிரியப்பனவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் பொதுத்துறை இணைச் செயலாளராக இருந்தார். தேனி ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமிக்கப்பட்டார். இவர் சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்தவர்.