ஹோண்டுராஸுக்கு வடக்கே கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொலம்பியா, கேமன் தீவுகள், கோஸ்டாரிகா, ஜமைக்கா, நிகரகுவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 0.3 மீ முதல் 1 மீட்டர் வரை உயரம் கொண்ட அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தீவுப்பகுதியில் இருந்து நிலப்பகுதிகளுக்கு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.