கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாசாணியம்மன் கோயிலில் வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் கூடுவர். இதுமட்டுமின்றி அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும் மக்கள் வருகை அதிகரித்துக் காணப்படும். இந்த நிலையில், மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை நடைபெற்றது. இதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த குண்டத்தின் முன்பாக, பூசாரி சிறப்பு பூஜைகளை நடத்தினார். அதன் பின்னர், தலைமை பூசாரி, அருளாளிகள் மற்றும் முறைதாரர்கள் ஆகியோரை தொடர்ந்து பக்தர்களும் குண்டம் இறங்கினர்.