மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கம் கொண்ட நவீனமயமாக்கலை முன்னெடுக்கும் சீனா
சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சீனத் தேசிய மாநாடு ஜூலை 17 மற்றும் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இம்மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்துகையில், அழகான சீனா என்ற கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்றி, பசுமை சார் அடிப்படையில், உயர் தர வளர்ச்சியை ஆதரித்து, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கம் கொண்ட நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பசுமையான மற்றும் கார்பன் குறைந்த சுழற்சி முறை பொருளாதார அமைப்பை உருவாக்குவது, மலை, காடு, ஏரி முதலியவற்றுக்கான ஒருமைப்பாட்டுப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது, புதிர ரக மின்சார அமைப்பை உருவாக்குவது, கார்பன் குறைந்த வளர்ச்சி கொள்கையை முழுமைப்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவது, “அழகான சீனா” என்பதற்கான எண்ணியல் மேலாண்மை முறைமை உருவாக்குவது முதலிய அம்சங்கள் பற்றியும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். ஆளும் கட்சியின் தலைமையில், சீன மக்கள், சூழலியலுக்கு முன்னுரிமை கொடுத்து, பசுமை வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகின்றனர். அழகான சீனா என்பது, சீனாவின் நவீனமயமாக்கலில் ஒரு முன்மாதிரியாகும்.