வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது.
இதன் தாக்கத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 28) முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வரை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை துறை தெரிவித்துள்ளது.
அதற்க்காக ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ள மாவட்டங்கள்- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.
அதோடு 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை கரையை கடக்கும் ‘Montha’: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
