கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ‘ஏரோ இந்தியா 2025’ விமான சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், ரஷியாவை சேர்ந்த Su-57 விமானம், அமெரிக்காவின் F-16 விமானம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் LUH, HTT-40, LCA Mk-1A மற்றும் IJT ஆகிய விமானங்கள், இந்திய விமானப்படையின் Su-30 MKI விமானம் ஆகியவை இடம்பெற்றன.
‘ஏரோ இந்தியா 2025’ நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் உள்பட 84 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.