பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.
இந்திய நேரப்படி இன்று காலை பிரதமர் மோடி அதிபர் டிரம்பை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி புதிய அதிபராக பொறுப்பேற்றதற்கு டிரம்புக்கு நன்றி சொன்னார். இதைத்தொடர்ந்து ட்ரம்ப் பேசியதாவது, இந்தியாவுக்கான மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய உள்ளது.
இந்தியா அதிக அளவில் எண்ணெய் எரிவாயுவை கொள்முதல் செய்ய உள்ளார்கள். பிரதமர் மோடி ஒரு மிகச் சிறந்த தலைவர். அவர் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுகிறார். இனி வரும் காலங்களில் இந்தியாவுடனான நட்பு இன்னும் நெருக்கமாகும். பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பராக இருக்கும் நிலையில் அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் வர்த்தகம் உட்பட பல விஷயங்கள் தொடர்பாக பேச உள்ளோம் என்று கூறினார்.