டெல்லியில் கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த கத்தார் மன்னரான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருநாடுகளின் தலைவர்களும் ஹைதராபாத் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது, வருமான வரி தொடர்பான நிதி மோசடியைத் தடுக்கும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. மேலும், வர்த்தகம், எரிசக்தி, முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முன்னதாக, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை, கத்தார் மன்னர் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.