ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மகா சிவராத்திரி திருவிழாவின் முதல் நாளில் சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி தங்க நந்திகேஸ்வரர் வாகனத்திலும் , ஸ்ரீ பர்வதவத்தினி அம்பாள் வெள்ளி அண்ண வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி நான்கு ரத வீதியில் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 26ம் தேதி சிவராத்திரி அன்று நடைபெறும்.