உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் நிறைவடைகிறது. இதுவரை 60 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில் மகா கும்பமேளாவை விமர்சித்த எதிர்க்கட்சியினருக்கு தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, கும்பமேளாவை தேடி வந்த அனைவருக்கும் ஏதோ ஒன்று கிடைத்துள்ளது. ஆனால் கழுகுகளின் கண்களுக்கு பிணங்கள் மட்டும்தான் தெரிந்தது. அதே போன்று பன்றிகளின் கண்களுக்கு அசுத்தம் மட்டும் தான் தெரிந்தது.
உணர்வுபூர்வமான மக்களுக்கு தங்கள் உறவுகளுடன் அழகான நினைவுகளும் நேர்மையானவர்களுக்கு நன்மையும் கிடைத்ததோடு பக்தர்கள் கடவுளை கண்டனர். எதிர்க்கட்சிகள் மகா கும்பமேளாவின் மகத்துவத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள்.
கடந்த ஒன்றரை மாதங்களாக சோசலிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் கருத்துகளை பரப்பினர். அவர்கள் தேவையில்லாத கருத்துக்களை பரப்பி கற்பனையான அழுக்கு மற்றும் ஒழுகின்மை மூலம் சுற்றுலா பயணிகளை சிரமத்திற்கு ஆளாக்கினர். ஆனால் அவர்களின் கருத்துகள் எடுபடவில்லை. 60 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடி சனாதன தர்மத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் யோகி ஆதித்யநாத் இப்படி கூறியுள்ளார்