சீனாவைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சிக் குழு ‘Hui Si Kai Wu’ என்ற புதிய உட்பொதிந்த நுண்ணறிவு மேடையை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
வெவ்வேறு வகையிலான ரோபோக்களுக்கு ஏற்ற பொது மூளை ஒன்றை உருவாக்கி வெவ்வேறு செயல்பாடுகளில் ரோபோட்டுக்களை ஈடுபடச் செய்வது இதன் நோக்கமாகும்.
மனித உருவ ரோபோக்களுக்கான பெய்ஜிங் புத்தாக்க மையம் இந்த மேடையை உருவாக்கியுள்ளது. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட செயல்களுக்காக ரோபோட்டுகள் வடிவமைக்கப்படும். இத்தகைய நிலையிலிருந்து இப்புதிய மேடை மாறுபடுகிறது. வெவ்வேறு ரோபோட்டுகள் மற்றும் வெவ்வேறு சூழல்களுக்கு ஒரு பொதுத் தீர்வை இது வழங்குகிறது.
இது தொடர்பாக வெளியான காணொளி ஒன்றில் இப்புதிய உட்பொதிந்த நுண்ணறிவு மேடை எப்படி பல்வேறு வகை ரோபோட்டுகளுக்குப் பொருந்துகிறது என விளக்கப்பட்டுள்ளது.
இம்மேடையின் உதவியுடன் ரோபோட்டுகள் செய்ய வேண்டிய செயல்களை முழுமையாக அறிந்து உரிய முறையில் செய்து முடிப்பதுடன், பல்வேறு சூழ்நிலைகளில் சிக்கலான பணிகளைக் கையாளும் திறனை இது கொண்டுள்ளது.
முன்னதாக, தியன்குங் என்ற ரோபோட்டை, பெய்ஜிங்கிலுள்ள இந்த புத்தாக்க மையம் கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட்டது. இது, உலகின் முதலாவது முழு அளவிலான மின்னாற்றலால் இயங்கும் மனித உருவ ரோபோ என்ற பெருமையைப் பெற்றது.