சென்னை வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகை 5-ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டது.
ஆனால் தற்போது வாடகையை ஐந்து சதவீதமாக குறைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 5,914 கடைகள் மூலம் மாதம் தோறும் 180 கோடி ரூபாய் வசூல் செய்து வருகிறது. வணிக வளாக கட்டிடங்களின் குத்தகை காலம் 9 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.