இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ), அதன் சர்வதேச விரிவாக்க முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், மும்பையில் ஒரு உலகளாவிய தலைமையகம் மற்றும் 5,000 இருக்கைகள் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்த திட்டத்திற்காக நிலத்தை ஒதுக்கியுள்ளது.
யுபிஐ மற்றும் ரூபே நெட்வொர்க்களை இயக்கம் என்பிசிஐ, இந்தியாவின் டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பில் உலகளாவிய ஆர்வம் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் என்பிசிஐ அலுவலகத்திற்கு வந்து அதன் கட்டண நெட்வொர்க் அமைப்பை ஆய்வு செய்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி திலீப் அஸ்பே தெரிவித்தார்.
மும்பையில் உலகளாவிய தலைமையகம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்கிறது என்பிசிஐ
