ஜப்பானின் பிறப்பு விகிதம் வரலாற்றில் முதல்முறையாக மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் வெறும் 720,988 பிறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்த பிறப்பு விகிதங்களை சந்தித்து வரும் ஜப்பான், இந்த ஆண்டு, கடந்த ஆண்டை விட 5% குறைந்த பிறப்பு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜப்பானில் 1.6 மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக குடியேற்றத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 900,000 மக்கள் தொகை குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதன் பொருள் ஒவ்வொரு புதிய குழந்தைக்கும் இரண்டு நபர்கள் இறந்தனர்.
ஜப்பானின் பிறப்பு விகிதம் 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது
