ஹரியானாவின் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நாளன்று நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
ரோஹ்தக்கில் இளைஞர் காங்கிரஸின் தீவிர உறுப்பினரான நர்வால், வெள்ளிக்கிழமை ஒரு நீல நிற சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் கழுத்தில் ஒரு தாவணியையும், கைகளில் மெஹந்தியுடனும் சடலமாக காணப்பட்டார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரியானா காங்கிரஸ் நிர்வாகியின் உடல் சூட்கேஸில் சடலமாக கண்டெடுப்பு
