கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணியாக களமிறங்கியது அதிமுக நீண்ட இழுபறிக்கு பின்னரே இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்டது.
அப்போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அப்படி ஒரு ஒதுக்கீடு ஒப்பந்தம் செய்யப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் ஆத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இபிஎஸ், தேமுதிகவுக்கு ராஜ்ய சபா இடம் தருவது பற்றி கேட்கப்பட்டது.
அப்போது, “யார் சொன்னாங்க? நாங்க சொன்னோமா? சொல்லுங்க, நாங்க ஏதாவது சொன்னோமா? யார் யாரோ சொன்னதை வைத்து எங்களிடம் கேட்காதீங்க. நாங்கள் ஏதும் வெளிப்படுத்தினோமா? தேர்தல் அறிக்கையில் என்ன வெளியிட்டோம், அது படிச்சு பாருங்கள், அப்படித்தான் நடந்துகொள்வோம்.” என பதில் அளித்தார்.
தே.மு.தி.க.,வுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்க அதிமுக பொதுச்செயலர் EPS மறுப்பு
