தமிழகத்தில் நேற்று அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று தமிழகத்தில் மொத்தம் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கடந்த மாதம் 10-ம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில் இன்று தேர் திருவிழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் இன்று நடைபெற இருக்கும் பொது தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 8-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.