பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற சரக்கு ரயில் ஒசூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் பான்ஸ்வாடி என்ற பகுதியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற பெட்ரோல் டேங்கர் சரக்கு ரயில் ஓஒசூர் அருகே தடம் புரண்டது. புதியதாக போடப்பட்ட ரயில் பாதையில் சென்றபோது திடீரென 18 எண் கொண்ட டேங்கர் தடம் புரண்டது.
இந்த சரக்கு ரயில் 52 டேங்கர்களுடன் வந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் மற்ற டேங்கர்களை பத்திரமாக பிரித்து பெங்களூரு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்ட பகுதியில், சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்ட காரணத்தால் ஓசூர் வழியாக செல்லும் ரயில்களின் பயணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.