மார்ச் 4ஆம் நாள் தொடங்கி ஃபெண்டானில் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருட்களின் மீது 10 விழுக்காட்டுக் கூடுதல் சுங்க வரி வசூலிப்பை அமெரிக்கா விதிக்கின்றது. இதற்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. சீனாவின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களையும் பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைப் பேணிகாக்கும் அதன் உறுதியையும் இது காட்டுகின்றது.
ஃபெண்டானில் பிரச்சினையை அமெரிக்கா அரசியல்மயமாக்கி ஆயுதமயமாக்கியுள்ளது என்பதுடன் பிற நிலைகளில் சமரசங்களைச் செய்ய சீனாவைக் கட்டாயப்படுத்த முயன்றது என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஃபெண்டானிலை அளவில்லாமல் பயன்படுத்துவது அமெரிக்காவின் உள்நாட்டு நெருக்கடியைச் சேர்ந்தது. ஃபெண்டானில் பிரச்சினையில் வெளிநாடுகளில் “பலிகடாக்களைத்” தேட அமெரிக்க அரசு விரும்புகிறது. போதைப்பொருள் நெருக்கடி உள்நாட்டு தேவையால் இயக்கப்பட்டு பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது என்பதை உணரவில்லை என்று உலக ஆலோசனை நிறுவனமான டிஃபெரன்ஸ் குழுமத்தின் நிறுவனர் டான் ஸ்டீன்பாக் அண்மையில் கூறினார்.
கூடுதல் சுங்க வரி வசூலிப்பு கீழ், அமெரிக்க மக்களின் வாழ்க்கை செலவு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஃபெண்டானில் பிரச்சினையை அமெரிக்கா உண்மையாக தீர்க்க விரும்பினால், சீனாவுடன் சமமான ஆலோசனை நடத்தி தீர்க்க வேண்டும்.
மாறாக, சுங்க வரி வசூலிப்பு போராட்டத்தை நடத்த அமெரிக்கா தொடர்ந்து விரும்பினால், சீனாவும் இறுதிவரை எதிரொலிக்கும்.