தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் 56 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பைத் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் பலம் குறைவாகும் என்றும், இது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய உரிமைப் போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.
அதோடு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பிரதமர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தலைமை செயலகத்தில் கூடிய அனைத்துக்கட்சி கூட்டம்
