அமெரிக்காவில் உள்ள மார்கரேட் போமர் என்ற கர்ப்பிணி பெண்ணின் கருவில் உள்ள குழந்தைக்கு கருவில் இருக்கும் போதே முதுகு வால் எலும்பில் கட்டி வளர்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பிறந்த குழந்தைக்கு பொதுவாக ஏற்படும் கட்டியாகும். ஆனால் கருவில் உள்ள குழந்தைக்கு ஏற்படுவது மிகவும் அரிதாகும் என டெக்சாஸ் குழந்தைகள் கருமயத்தின் இணை இயக்குனர் டாரல் காஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, குழந்தையின் ரத்த ஓட்டத்தை எடுத்துக்கொண்டு குழந்தையோடு கட்டியும் வளர முயற்சிக்கிறது. சில நேரங்களில் கட்டியின் வளர்ச்சியால் குழந்தையின் இதயம் செயல்படாமல் குழந்தை இறந்து விட வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார். எனவே 23 வாரங்களே ஆன கருவில் உள்ள குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் கருப்பையை திறக்கவே அதிக நேரம் செலவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சிகிச்சையில் கருவில் உள்ள குழந்தைக்கு 20 நிமிடங்கள் சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனை அமெரிக்க மருத்துவ குழு வெற்றிகரமாக கட்டியை அகற்றி அறுவை சிகிச்சையை முடித்துள்ளனர்.
பின்னர் மீண்டும் குழந்தை தாயின் கருப்பையில் வைத்து மூடியுள்ளனர். மேலும் 12 வாரங்களுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் சி பிரிவு மூலம் லின்லீ ஹோப் என்ற பெண் குழந்தை இரண்டாவது முறையாக பிறந்துள்ளது.