சீனாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான பி.ஒய்.டி. மற்றும் உலகின் முதன்மையான ட்ரோன் தயாரிப்பாளரான டி.ஜே.ஐ. ஆகியவை உலகின் முதல் வாகனத்தில் பொருத்தப்பட்ட ட்ரோன் அமைப்பை அண்மையில் கூட்டாக வெளியிட்டன. இதன் மூலம் ட்ரோன் தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் முதல் வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை பி.ஒய்.டி. பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த ட்ரோன் அமைப்பை கொண்ட பி.ஒய்.டி. வாகனங்களில் சாலைப் பயணங்களைப் படமாக்க, போக்குவரத்தைக் கண்காணிக்க அல்லது அவசரகால சூழ்நிலைகளில் உதவ இந்த ட்ரோன்களை ஓட்டுநர்கள் பயன்படுத்தலாம். பி.ஒய்.டி. மற்றும் டி.ஜே.ஐ. இடையேயான ஒத்துழைப்பு, ஒரு வாகனத்தில் ஒரு ட்ரோனை வைப்பது மட்டுமல்லாமல், வாகனத்துக்கும் ட்ரோனுக்கும் இடையில் ஆழமான இணைவை அடைய வேண்டும் என்றும் பி.ஒய்.டி. நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வாங் ச்சுவான்ஃபூ கூறினார்.
டிஜிட்டல் மற்றும் வாகன தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பானது, அறிவார்ந்த பயணம் மற்றும் வான்வழி பயன்பாடுகளுக்கான புதிய சாத்தியங்களைத் திறந்துவைத்துள்ளது என்று தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். இது டிஜிட்டல் மற்றும் வாகனத் துறைகளிடையே எல்லை தாண்டும் ஒத்துழைப்பு ஆகும் என்று தொழில்நுட்ப பதிவர் யூ லாங் கூறினார்.