அக்டோபர் முதல் நாள் அமெரிக்க கூட்டாட்சி அரசுபணி நிறுத்தப்பட்டது. இது குறித்து உலகில் 38 நாடுகளைச் சேர்ந்த 7671பேரிடம் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். தொலைக்காட்சி
நிலையம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இதில் பங்கேற்பவர்கள், அமெரிக்காவில்
அரசியல் தோல்வி மற்றும் அரசாங்கத்தின் நிர்வாக செயலிழப்பினால் நீண்டகாலமாக
ஏற்பட்டு வரும் அமைப்புமுறை ரீதியிலான பிரச்சினை மீது ஏமாற்றம் தெரிவித்தனர்.
இது, அமெரிக்க கூட்டாட்சி அரசு பணி நிறுத்தம்
சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நிகழ்ந்தது, கடந்த அரசு நிறுத்தம், டொனல்ட்
டிரம்பின் முதல் அரச தலைவர் பதவி காலத்தில் நிகழ்ந்தது. இந்த கருத்து கணிப்பில்,
அமெரிக்காவின் இரு கட்சிகளுக்கிடையிலான சண்டை, சமூகத்தின் பிளவுகளை கடுமையாக
தீவிரமாக்கியுள்ளது என்று 71.5 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர், இரு
கட்சிகளின் மோதல் அமெரிக்காவின் அரசியல் அமைப்புமுறைக்குள் சமரசம் செய்ய முடியாத
முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது என்று 74.4விழுக்காட்டினர்
கருத்து தெரிவித்தனர். மேலும், அமெரிக்காவின் அரசியல் அமைப்புமுறையில் உரிய
மாற்றங்கள் செய்ய வேண்டியது என்று 73.2விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.