2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதி வரை, சீனாவிலுள்ள தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை 5கோடியே 67லட்சத்து 7ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 2012ஆம் ஆண்டைக் காட்டிலும், 5.2மடங்கு அதிகமாகும். சீனாவின் புதிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் இருந்த 28 ஆயிரத்திலிருந்து 4லட்சத்து 20ஆயிரத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது. புதிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையிலும் இது 92விழுக்காட்டுக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.