அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப விலையுயர்ந்த இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
சில புலம்பெயர்ந்தோரை அவர்களின் சொந்த நாடுகளுக்கு அல்லது கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள இராணுவ தளத்திற்கு கொண்டு செல்ல அமெரிக்க இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவது விலை உயர்ந்ததாகவும், திறமையற்றதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம், வரும் நாட்களுக்கு எந்த விமானங்களும் திட்டமிடப்படவில்லை என்றும், கடைசி இராணுவ நாடுகடத்தல் விமானம் மார்ச் 1 அன்று நடைபெற்றது என்றும் தெரிவித்தனர்.