பொதுவாக தான் நடிக்கும் படத்தின் விழாக்களிலோ, பூஜையிலோ நயன்தாரா கலந்து கொள்வதில்லை.
இது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்த போதும், தனது கொள்கையை அவர் மாற்றிக்கொண்டதே இல்லை.
இந்த நிலையில் வியாழக்கிழமை சென்னையில் நடந்த மூக்குத்தி அம்மன் 2 பூஜை விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
விழாவில் நயன்தாரா, மூத்த நடிகைகள் குஷ்பு, மீனா, ரெஜினா கேஸான்ட்ரா, அபிநயா உள்ளிட்டவர்களுடன் அவர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா, இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்கிறார்.